ராக்கெட் வேகத்தில் வெங்காய விலை.... அதல பாதாளத்தில் தக்காளி ... இது சென்னை காய்கறி நிலவரம்!
சென்னை: சென்னையில் கடந்த 1 வாரமாக தக்காளி விலை குறைந்துள்ள நிலையில் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்திற்கு எகிறி நிற்கின்றது.
இதற்கு முன்பு தக்காளி 1 கிலோ ரூபாய் 40 முதல் ரூபாய் 50 வரை விற்கப்பட்டது.
விண்முட்டும் உச்சத்தில் இருந்த தக்காளி விலை மளமளவென குறைந்து தற்போது கிலோ 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சந்தேகமோ சந்தேகம்:
கடைக்காரர்கள் தக்காளி 8 ரூபாய் என்று கூவி கூவி விற்கும் போது கால் கிலோவுக்கு விலை சொல்கிறாரா அல்லது அரை கிலோவுக்கு விலை சொல்கிறாரா என பொதுமக்கள் சந்தேகத்துடன் மீண்டும் விலையை கேட்கின்றனர்.

மக்ழ்ச்சியில் வாங்கும் மக்கள்:
அப்போது கடைக்காரர் 1 கிலோ தக்காளி 8 ரூபாய் தான், விலை மலிந்து விட்டது என்றதும் மகிழ்ச்சியோடு தக்காளியை வாங்குகின்றனர்.

உயர்ந்து நிற்கும் வெங்காயம்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு நேர் மாறாக வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ வெங்காயம் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரை விற்கப்படுகிறது.

விளைச்சல் குறைவு:
வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் போலவே வெங்காயம் விலையும் சரசரவென உயரலாம் என்று அஞ்சப்படுகின்றது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications