எப்பப் பார்த்தாலும் சந்தேகம்.. சிவபெருமாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சாவித்திரி!
சென்னை: குடித்து விட்டு வந்து தாறுமாறாக அடிப்பது, நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டுவது என்று கொடுமைப்படுத்தி வந்த கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றார் மனைவி. போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் வாட்ச்மேன் சிவபெருமாள். 30 வயதாகும் இவரது மனைவி பெயர் சாவித்திரி. இவர்கலுக்கு 2 மகள்கள் உள்ளனர். நல்ல போதைக்காரர் சிவபெருமாள். வேலை முடிந்ததும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவாராம். வந்தால் மனைவியைப் போட்டு அடித்து உதைப்பது அவரது இரவு நேர பொழுதுபோக்கு போல இருந்தது. சமீப காலமாக வேலைக்கும் போவதில்லையாம். எந்த நேரமும் குடிதானாம்.

சாவித்திரி ஒரு கடையில் வேலை பாரத்து குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் உனக்கு பலருடன் தொடர்பு இருக்கு. கையில் ஏது இவ்வளவு பணம் என்று கேட்டு அடிப்பாராம் சிவபெருமாள். தனது நடத்தையை அடிக்கடி குறை கூறி கணவர் அடித்து உதைத்ததால் மன வேதனையில் இருந்துள்ளார் சாவித்திரி.
இந்த நிலையில் 13ம் தேதி திடீரென இறந்து போனார் சிவபெருமாள். போலீஸார் மர்ம மரணம் என முதலில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின்போது சாவித்திரி மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது தான்தான் கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக ஒப்புக் கொண்டார் சாவித்திரி.
குடிபோதையில் சண்டை போடுவது, பொறுப்பான குடும்பத் தலைவராக இல்லாமல் ஊதாரித்தனமாக இருந்தது, தனது நடத்தையில் சந்தேகப்பட்டது ஆகியவை தன்னை வெகுவாக பாதித்ததால் கணவரை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக சாவித்திரி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன் பேரில் அவரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications