சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்யுமாம்..! தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவ்ததுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்திலும் படிப்படியாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

கரையை கடந்தது

கரையை கடந்தது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல் வங்கதேசத்தில் இன்று கரையை கடந்ததாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 துறைமுகங்கள் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வெப்பசலனத்தால் மழை

வெப்பசலனத்தால் மழை

இந்த காற்றா தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த பழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் மழை பெய்யும்

சென்னையில் மழை பெய்யும்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

உதகையில் மழை

உதகையில் மழை

உதகையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai meteorological center says that Tamilnadu and Puducherry will get rain within 24 hours. Chennai will be cloudy, in the evening time it will get rain.
Please Wait while comments are loading...