சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்குமாம்
சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் அடுத்த வாரம் முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. அன்றிலிருந்து ஒரு 10 நாள்களுக்கு சென்னையில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டது. அதன்படி வானிலையும் மாறி தற்போது வெயில் கொளுத்துகிறது.

மழை பெய்தது
சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த வாரம் வங்கக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

லேசான மழை
சென்னை மழை குறித்து நார்வே வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்யும். அடுத்த வாரத்தில்தான் மழை வெளுக்கும்.

3 நாள்களுக்கு
சென்னையில் அடுத்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை வெளுத்து வாங்கும். திங்கள்கிழமை பெய்யத் தொடங்கும் மழை செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை வரை கொட்டித் தீர்க்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

லேசான வெயில்
நேற்றிரவு சென்னையில் மழை பெய்ததால் இன்று லேசான வெயில் தலை காட்டியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications