மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மத்திய அரசு ஊழியரின் மனைவி
சென்னை: சென்னையில் மத்திய அரசாங்க உயரதிகாரியாக பணி புரிபவரின் மனைவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் சென்னை நுங்கம்பாக்கம் கலால் வரித்துறை துணை ஆணையராக பணியில் உள்ளார். இவருடைய மனைவி பார்வதி பட். இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகள் பெங்களூரில் பணி புரிந்து வருகின்றார். இளையவர் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர்கள் தெற்காசிய விளையாட்டு கிராம பி- 5 பிளாக்கில் வசித்து வருகின்றனர்.
தினமும் காலை 5 மணிக்கே நடைபயிற்சியில் ஈடுபடும் பழக்கமுள்ள பார்வதியை நேற்று காலையில் படுக்கையில் காணவில்லை. எப்போதும் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருப்பார் என பாலு நினைத்துள்ளார். ஆனால், அதிக நேரம் ஆகியும் பார்வதி வீடு திரும்பவில்லை.
தன்னுடைய வீட்டு மாடியில் இருந்து அவர் பார்த்தபோதுதான் பார்வதி கீழே இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் பார்வதி பட் கடந்த சில நாட்களாக மனநல பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications