Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனின் கள்ளக்காதல் பற்றி வயிற்றில் மரண வாக்குமூலம் எழுதி வைத்து பெண் தற்கொலை.. சென்னையில் பரபரப்பு

கணவனின் கள்ளக்காதலை தட்டிக் கேட்டதால் வரதட்சணை கொடுமை செய்ததை தாங்க முடியாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தட்டிக் கேட்ட பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் 17 பக்க கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு மன்னர் அவர் பதிவு செய்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    கணவன் கள்ளக்காதல்! உடலில் கடிதம் எழுதி வைத்து விட்டு மனைவி தற்கொலை-வீடியோ

    சென்னையை அடுத்த மணலி அண்ணா நகரைச் சேர்ந்த 30 வயது டார்வினுக்கும், வியாசர்பாடியைச் சேர்நத் பிகாம் பட்டதாரிப் பெண்ணான 26 வயது தேவிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. டார்வின் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன் தினமும் டார்வின் தேவி இடையே கள்ளக்காதல் விவகாரத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டார்வின் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் மன உளைச்சலில் இருந்த தேவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

     உடலில் மரண வாக்குமூலம்

    உடலில் மரண வாக்குமூலம்

    இதனையடுத்து விஷயமறிந்து மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேவியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். பிரேத பரிசோதனையின் போது தனது வயிற்றுப் பகுதியில் தேவி தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளதாக எழுதி இருந்தார். தனது படுக்கையறையில் அந்த கடிதத்தை மறைத்து வைத்திருப்பதாகவும் தேவி அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருந்தார். கணவரின் குடும்பத்தார் வாக்குமூலத்தை மறைத்து விடுவார்கள் என்பதால் கடிதத்தை மறைத்து வைத்துவிட்டு, அதன் குறிப்பை தனது உடம்பில் எழுதியிருந்தார் தேவி.

     கணவரின் கள்ளக்காதல்

    கணவரின் கள்ளக்காதல்

    போலீசார் கைப்பற்றிய மரண வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது : "எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் உள்ளது. அந்த பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருக்கும் படத்தை அவரது செல்போனில் பார்த்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் கள்ளக்காதலுக்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

     வீடியோ பதிவு

    வீடியோ பதிவு

    இதனிடையே தேவி இறப்பதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்து தன்னுடைய உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் ஒன்றரை ஆண்டுகளில் நான் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து விட்டேன். என்னுடைய தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளேன். இந்த வீடியோவை நான் வெளியிடுவது என்னுடைய குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அனைத்து பெற்றோருக்கும் சேர்த்து வெளியிடுவதாக தேவி வேதனையுடன் கூறியிருந்தார்.

     ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

    ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்வின், அவருடைய தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேவிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதனிடையே, விசாரணைக்கு பிறகு, டார்வின் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+