சென்னை அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. கோயில் அருகே நடந்த பயங்கரம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் புத்தாண்டு துவக்கத்தின் முதல் நாளே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் மலைமேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளியான கொள்ளி மேட்டுத்தெருவை சேர்த்து சடையன் என்பவரது மகன் (வயது 24) அஜீத்குமாருக்கும் சூர்யாவின் எதிர் கோஷ்டியான தீனா, ராமு என்கிற ராமச்சந்திரன் லோகேஷ், கறிபரத், இவர்களுக்கும் அஜீத்குமாருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் அஜீத்குமார் கறிபரத்தை கொலை செய்ய திட்டமிட்டு தன் நண்பர்களோடு சேர்த்து கறி பரத்தை அஜீத்குமார் தாக்கியிருக்கிறார் அதில் உயிர் தப்பித்த கறிபரத் பழிவாங்கும் நொக்கில் அஜீத்தை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப் படுகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்து சிங்கபெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அஜீத்குமாரை மர்ம கும்பல் மடக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அஜீத்குமார் தப்பித்து ஓட முயன்ற போது மர்மகும்பல் விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
முகம் சிதைந்த நிலையில் அஜீத்குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புத்தாண்டு பிறந்த முதல்நாளே அருகில் பிரசித்தி பெற்ற நரசிம்மபெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இருப்பினும் கோயில் அருகிலேயே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. சடலத்தை மீட்ட மறைமலைநகர் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications