சென்னையில் சட்டென்று பெய்த சாரல் மழை... ஜில்லென்று நனைந்த மக்கள்
சென்னை: சென்னையில் இன்று காலை திடீரென சாரலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த ஒருவார காலமாகவே வெயில் கடுமையாக இருந்தது. சென்னைவாசிகள் புழுக்கத்தில் சிக்கித் தவித்தனர் அக்னியில் சிக்கித்தவித்த சென்னைவாசிகளுக்கு ஆறுதலாய் பெய்தது சாரல் மழை.
சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருட்டாக வானம் இருந்த நிலையில். திடீரென சாரல் மழையை பெய்யத் தொடங்கியது.
மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இந்த திடீர் சாரல் மழையால் வாகனங்களில் சென்றோர் நனைந்தனர். விடுமுறை என்பதால் காலையிலேயே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் மாணவர்கள் மழை நனைந்தபடி விளையாடினர்.
அலுவலகத்திற்குச் செல்வோர் சாரல் மழையில் நனைந்த படி சென்றனர். இந்த சாரல் மழை சிறிது நேரமே பெய்தது.
சென்னையில் திடீரென சாரலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாட்டி வதைக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு இந்த சாரல் மழை சற்று ஆறுதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துன் காணப்பட்டது. மப்பும், மந்தாரமுமாக இருந்த வானம். திடீரென சாரல் மழையை கொட்டியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வெப்பம் அதிகரித்துள்ளதால் வெப்பச்சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications