சாதனைக்கு மேலும் ஒரு மகுடம்.. செவாலியர் விருது பெற்ற கமல் ஹாசனுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: செவாலியர் விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
ஸ்டாலின் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியர் விருதைப் பெறும் நடிகர் திரு Kamal Haasan அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியர் விருது பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமே நமது கமலஹாசன் அவர்கள் பெருமை சேர்த்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்குப் பிறகு செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
"களத்தூர் கண்ணாம்மா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கடந்த அரை நூற்றாண்டுகளாக கொடி கட்டிப் பறந்து வரும் அவர் இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பல்வேறு தேசிய, மாநில விருதுகளையும், பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நடிகர், இயக்குநர், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications