இது 2019 இல்ல.. "கேக் வாக்" ஆன சிதம்பரம் தொகுதி! திருமாவளவன் மெகா வெற்றி! வாக்கு வித்தியாசம் என்ன?
சிதம்பரம்: லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் வெற்றிபெற்றுள்ளார். சிதம்பரத்தில் விசிக திருமாவளவன் 505084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருமா இங்கு அசத்தலாக 103554 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 401530 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றுள்ளார். பாஜக கார்த்தியாயினி 168493 வாக்குகள் பெற்றுள்ளார்.
சிதம்பரம் தொகுதி தமிழ்நாட்டில் மிகவும் கவனிக்கப்படும், அதிக பரபரப்பிற்கு உள்ளாக்கும் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட களேபரம் காரணமாக இந்த முறை அந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.

சிதம்பரம் தொகுதியில் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொல் திருமாவளவன் மீண்டும் களமிறங்கி உள்ளார். திமுக கூட்டணி சார்பாக இவர் பானை சின்னத்தில் போட்டியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும்.
அந்த வகையில் அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் உயர் நீதிமன்றம் வரை சென்று பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது.
இங்கே அதிமுக சார்பாக எம் சந்திரஹாசன் போட்டியிடுகிறார், பாஜக சார்பாக கார்தியாயினி போட்டியிடுகிறார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கூட, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர்.
தற்போது பாஜக சார்பாக இவர் இங்கே வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால் இங்கே பாஜக - விசிக இடையே கடும் போட்டி உள்ளது. இங்கே நாம் தமிழர் சார்பாக ஜான்சி ராணி போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தல்: 2019 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 500,229 வாக்குகள் பெற்று திருமாவளவன் வென்றார். இரவு வரை நடந்த வாக்கு எண்ணிக்கை , இரவுக்கு மேல் நடந்த சில சுற்றுக்கான மறு வாக்கு எண்ணிக்கைக்கு பின் 3219 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் வென்றார். அதிமுக சந்திரசேகர் இங்கே 2019ல் 4,97,010 வாக்குகள் பெற்று வெற்றியின் விளிம்பில் தோல்வி அடைந்தார்.
2019 மாதிரி இல்லாத 2024 ரிசல்ட்: சிதம்பரத்தில் விசிக திருமாவளவன் 505084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருமா இங்கு அசத்தலாக 103554 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 401530 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றுள்ளார். பாஜக கார்த்தியாயினி 168493 வாக்குகள் பெற்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications