சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டம்... 21 படிகளில் 3000 கொலுக்கள் அணிவகுப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட கொலு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் : பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலுவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இதனையொட்டி கோயிலில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன.

9 தினங்கள் நடக்கும் இந்த நவராத்திரி விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் மற்றும் தீபாராதனை நடப்பது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கின்றனர்.

கோயிலில் புராணக்கதைகளை எடுத்துக்காட்டும் வகையில் பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட பரமபதம் காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இளம் தலைமுறையினர் புராணங்களை மறந்து வரும் நிலையில், மனிதனின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கொலு அனைவரையும் பிரமிக்கச் செய்தது.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications