For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றிரவு சந்திக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்றிரவு சந்தித்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.

தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பரபரப்பான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Chief Minister Edappadi Palanisamy meets Governor Banwarilal Purohit today

போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி ஊட்டி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவசரமாக சென்னை புறப்பட்டார்.

இந்நிலையில் இன்றிரவு 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரும், ஆளுநரை சந்தித்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.

English summary
Chief Minister Edappadi Palanisamy meets Governor Banwarilal Purohit today at 9 PM. CM may explain about Thoothukudi fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X