விசுவாசமிக்க தொண்டராக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்.. எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றிய ஏ.கே.போஸின் இறப்பு வேதனை தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏ.கே.போஸ் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர். அவரது இறப்புக்கு உண்மையிலேயே வேதனைப்படுகிறோம் வருந்துகிறோம் என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹித்புரத்தில் உள்ள ஏ.கே.போஸின் வீட்டில் அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திருப்பரங்குன்றம் எம்எல்ஏ அண்ணன் ஏ.கே.போஸ் விசுவாசமிக்க ஒரு தொண்டனாக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். கட்சிக்காக விசுவாசத்தோடு உழைத்தவர். தன்னுடைய உழைப்பால் கட்சிக்காரர்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். விசுவாசமிக்க ஒரு தொண்டனாக பணியாற்றியவர். அவருடைய இறப்புக்கு உண்மையிலேயே வேதனைப்படுகிறோம். வருத்தப்படுகிறோம் என்று கூறினார்.
இதையடுத்து ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஏ.கே.போஸ் முன்மாதிரியான செயல்பாட்டாளராக இருந்தார். அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கை தேர்தல் பணியின்போது நேரில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவரின் பிரிவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications