மறைந்த எம்.எல்.ஏ., போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் அஞ்சலி
மறைந்த எம்எல்ஏ போஸ் உடலுக்கு முதலமைச்சர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
மதுரை: மறைந்த எம்.எல்.ஏ., ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரில் போஸ் வசித்து வந்தார். உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் அவ்வப்போது முக்கிய கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.

எனினும், நேற்று நள்ளிரவு தூக்கத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த போஸின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் 1 மணி அளவில் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தமிழக அமைச்சர்கள், எம்,எல்.ஏக்களும், போஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். அதை தொடர்ந்து மாலை ஏ.கே. போஸின் வீட்டில் 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த ஏ.கே. போஸிற்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications