தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்ககோரி பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம்
தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்ககோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கோரியும், இலங்கை வசம் உள்ள 109 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க வேண்டும். இன்று இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். இலங்கை வசமுள்ள 109 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications