உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா?
ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் தொடர்பான வழக்கில் பேச்சுவார்த்தைக்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகியுள்ளார்.
மதுரை: தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பாக ஆஜராகியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவினை அடுத்து தலைமை செயலர் இன்று ஆஜரானார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவி செய்தது.
நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த வாரம் ஆஜராகினர்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஆவணங்களுடன் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனிடையே இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேரில் ஆஜரானார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், போராட்டத்தைத் தொடர உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். எனினும் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் நீதிபதிக்கள் முக்கிய உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications