கிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் பங்கேற்ற கருணாநிதி.. எஸ்.வி.சேகர் சகோதரர் மனைவி!
தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகரின் உறவுக்கார பெண்மணியாகும்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவியாகும். கிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் 45 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அப்பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ராம மோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு இந்த அதிரடி முடிவுக்கு காரணமாம்.
இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு
மத்திய பாஜக அரசு மறைமுகமாக தனது அதிகாரத்தை தமிழகத்தில் பயன்படுத்த கிரிஜா வைத்தியநாதனை தலைமைச் செயலராக பதவியில் அமர்த்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

தகுதியானவர்
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்திலான மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள். உண்மையிலேயே கிரிஜா வைத்தியநாதன் இந்த பதவிக்கு தகுதியானவர். 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர்தான் சீனியர் என்கிறார்கள்.

பதவி நியமிப்பில் அரசியல்
சீனியராக இருந்தாலும், சில, பல காரணங்களால் அவருக்கு பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போதுதான் சீனியருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வந்தது கிடையாது. திறமையான அதிகாரி. பன்னீர்செல்வம் அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று தெரிவிக்கிறார்கள்.

கருணாநிதி பங்கேற்பு
இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், கடந்த திமுக ஆட்சி காலத்தில் கிரிஜா வைத்தியநாதன் மகனுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. எஸ்.வி.சேகர்தான் திருமண ஏற்பாடுகளை கவனித்தார். திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். திமுக இதழான முரசொலியில் முதல் பக்கத்தில் இந்த படம் பெரிதாக வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications