வருமான வரித்துறை சோதனையில் அரசியல் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் அரசியல் எதுவும் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் ராம மோகன ராவின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடந்தது. இதனையடுத்து, தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், நகைகள், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின்படியே அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications