சென்னையில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிய கொடூரன்கள் 2 பேர் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் விளையாட சென்ற இரண்டரை வயது குழந்தைக்கு மதுவை ஊற்றி வேடிக்கை பார்த்த குடிவெறியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பிஞ்சு குழந்தைகளுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. தற்போது சென்னை அம்பத்தூரில் இப்படியான ஒரு விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.

அம்பத்தூர் மேனாம்பேட்டைச் சேர்ந்த தனலட்சுமியின் இரண்டரை வயது மகன் தானு விளையாட சென்றிருக்கிறான். பின் வீடு திரும்பிய குழந்தை தானு மயக்க நிலையில் வந்திருக்கிறான்.
உடனே பதறிப் போன தாய் மருத்துவர்களிடம் தூக்கிக் கொண்டு ஓடினார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை தானுவுக்கு யாரோ சில விஷமிகள் மதுவை ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து போலிசீல் தாய் தனலட்சுமி புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தானுவுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததாக செல்வம், பழனி இருவரும் சிக்கினர்.
இவர்கள் இருவரையும் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications