தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. யூனிசெஃப் அமைப்பு தகவல்
தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூரில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான மேம்பாட்டு மையம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் யூனிசெஃப் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜாப் ஜேகரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ஜாப் ஜேகரியா, தமிழகத்தில் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவளர் இளம் பருவத்தினர் வேலைகளுக்குச் செல்வதாகக் தெரிவித்தார்.
10 முதல் 19 வயதுடைய பெண்களில் 45 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் ஜாப் ஜேகரியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications