"நிலா காயுது..நேரம் நல்ல நேரம்..." ஆஹாஹா.. மழையை விடுங்க, இதைக் கேளுங்க பாஸ்!
சென்னை: மீசையை முறுக்கி விடுவது மட்டும் தமிழ் கம்பீரம் அல்ல.. மனதைத் தொட்டுத் தழுவிச் செல்லும் தென்றல் போன்றதும் கூட தமிழ்.. இயல் இசை நாடகம் என மு்றுக்கேற்றிய அந்த அழகிய மொழி, அந்நியர் ஒருவரின் வாயிலிருந்து இசையாக வழிந்தோடுவதைப் பார்க்கும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது..!
சீனத்துப் பட்டுமேனி செல்ல சிட்டுமேனி என்று தமிழில் ஒரு பாடல் உண்டு. ஆனால் சீனர் ஒருவர் அவ்வளவு அழகாக தமிழில் பாட்டுப் பாடுகிறார்.
ஆண் குரலில் அல்ல பெண் குரலில்.. அதுதான் விசேஷம்.. அதை விட நம்ம ஊரில் பலர் தமிழில் பாடுகிறேன் என்று கூறிக் கொண்டு கொன்று குவிக்கிறார்களே அதுபோல இல்லை.. அட்டகாசமான உச்சரிப்புடன் அசத்துகிறார் வில்லியம் சியா.. ஆமாங்க, அதுதான் அவரது பெயர்.

புத்தம் புதுக் காலை
இந்தப் பாட்டுக்கு சியா பாடியிருக்கிறார் பாருங்கள்.. இசையமைத்த இசைஞானியே மெய் சிலிர்த்துப் போய் விடுவார் இவர் பாடியதைக் கேட்டால். அப்படி ஒரு அம்சமான குரல் வளம்.. தமிழ் மீது தனிக் காதலே பிறக்கும் உங்களுக்கு இந்தப் பாட்டை சியா பாடுவதைக் கேட்டால்.

நிலாக் காயுது
இது இன்னொரு அட்டகாசம். அதே பாவத்தோடு அழகான பெண் குரலில் இவர் பாடுவதைக் கேட்கும்போது கயித்துக் கட்டில், கிணத்தடி, தோட்டம், பெளர்னமி நிலவு என்று பழைய கற்பனைக்கு மறுபடியும் ஒரு ரவுண்டு போய் விட்டு வருவது உறுதி.
சின்ன சின்ன வண்ணக் குயில்
இளையராஜா இசையில், மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி கலக்கிய மெளன ராகம் படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் இது. இந்தப் பாடலையும் சியோ பெண் குரலில் அப்படியே பாடி அசத்தியுள்ளார்.
சொல்லாமலே
சொல்லமலே யார் பார்த்தது.. தமிழர்கள் அதிகம் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மெலடி ரகப் பாடல்களுக்கு மத்தியில் இது புது வசந்தமாக வந்த பாடல். இந்தப் பாடலை அசத்தலாக பாடியிருக்கிறார் சியா. கேட்டுப் பாருங்க நீங்களும்.
சியாவின் பாடல்களைக் கேட்கக் கேட்க அவ்வளவு பரவசமாக இருக்கிறது.. நீங்களும் போய்க் கேட்டுப் பாருங்கள்.. இங்கே. https://www.youtube.com/channel/UCHwWX1AQZNOP55ACtbMaR3w/feed
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications