திரைத்துறையை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார்! #MeeToo
Recommended Video

சென்னை: திரைத்துறை பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார்களை கொடுத்து வந்த பாடதி சின்மயி தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் மலிங்கா பாலியல் புகார் கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
பாடகி சின்மயியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். திரைத்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அள்ளிவீசிய ஸ்ரீரெட்டியை தொடர்ந்து தற்போது சின்மயியும் பல்வேறு புகார்களை அளித்துள்ளார்.
[ சக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்.. "வீர மரணத்தில்" திடீர் திருப்பம்! ]

இலங்கை கிரிக்கெட் வீரர்
இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீதும் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

தோழி இல்லை
மலிங்காவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரை தனது டுவிட்டர் பக்கத்தில் சின்மயி பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அந்த பெண் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் மும்பையில் இருந்தேன். அப்போது எனது தோழியை காண ஹோட்டலில் உள்ள அறைக்கு சென்றேன். அப்போது அந்த அறையில் என் தோழி இல்லை.
|
இறுக்கமாக மூடினேன்
ஆனால் அங்கு இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா இருந்தார். அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் என்னை படுக்கையில் தள்ளி என் முகத்தருகே நெருங்கி வந்தார். அப்போது அவர் என்னைவிட உயரமாகவும் பலசாலியாகவும் இருந்ததால் அவரிடமிருந்து என்னால் மீள முடியவில்லை. அப்போது கண்களையும் வாயையும் இறுக்கமாக மூடிக் கொண்டேன்.

அவமானம்
அந்த நேரத்தில் ஹோட்டல் ஊழியர் கதவை தட்டியதால் மலிங்கா அறையை திறக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாத்ரூமுக்கு சென்று என் முகத்தை கழுவிக் கொண்டு ஹோட்டல் ஊழியர் சென்றவுடன் நானும் சென்று விட்டேன். அப்போது என்னை எல்லாரும் அவமானப்படுத்தினர்.

பழிபோட்ட சிலர்
நான் வேண்டுமென்றே அவரது அறைக்குள் நுழைந்ததாக சிலர் கூறினர். அவர் பிரபலம் என்பதால் அவரை தேடி நான் போனதாகவும் எனக்கு அவருடன் செக்ஸ் வைத்து கொள்ள ஆசை இருந்ததாகவும் சிலர் பழிபோட்டனர் என்று அந்த பெண் தன் புகாரில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications