கிறிஸ்துமஸ் தாத்தா ஆடி வர.. மாணவர்கள் பாடல் பாட...கோலாகல கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் மாணவர்கள் பாடல்களைப் பாடி,கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ்விழா 23.12.16 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு காரைக்குடி சகாய அன்னை ஆலய பங்குதந்தை அருட்திரு ஜி.வின்சென்ட் அமல்ராஜ் அவர்கள் தலைமையேற்றார்.
காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் லயன் .எஸ். பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

கிறிஸ்துமஸ் விழா
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஏ. ராஜா பாண்டியன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் திரு. டாக்டர். ஆர். சந்திர மோகன் அவர்கள், காரைக்குடி நகராட்சி கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. டி. செந்தில் குமார் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கிறித்துமஸ் வாழ்த்து
சகாய அன்னை ஆலய உதவி பங்கு தந்தை அருட்திரு. எஸ். பிரான்சிஸ் ஜெர்ரி அவர்கள், நேசனல் கேட்டரிங் கல்லூரி தாளாளர். திரு. சையது அவர்கள், பள்ளி வளர்ச்சி மற்றும் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் திரு.நாகநாதன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணவர்கள் உற்சாகம்
இவ்விழாவில் ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கிறிஸ்து பிறப்பைப் பற்றி பாடல் பாடினர். மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தனர். இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தா
ஏழாம் வகுப்பு மாணவர்களின் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சி அனைவரின் பாராட்டைப் பெற்றது. மாணவர்களே இந்நிகழ்ச்சிக்களைதொகுத்து வழங்கியது அனைவரின் பாராட்டைப்பெற்றது. கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் லயன். பி. பால சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி மற்றும் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications