மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - மே 7ல் மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மே 7ஆம் தேதி திருக்கல்யாணமும், 8ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
தினசரியும் காலை மாலையும் மீனாட்சி, சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கண்டு மகிழ பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதாக கோயில் தெரிவித்துள்ளது.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனையொட்டி கொடிமரத்தின் முன்பு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிம்மவாகனத்தில் உலா
மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் விருட்ஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலாவந்தனர். வெள்ளிக்கிழமை முதல் தினசரி அம்மன், சுவாமி, பிரியாவிடை பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மீனாட்சி பட்டாபிஷேகம்
மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம் நடைபெறும். அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம்
மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா
மே 9ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலும், மாட வீதிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications