ஆடி வந்தா ‘ஆடி’ப் போய்டுவீங்க.. இது சித்ரா ஆன்ட்டி ஸ்பெஷல்..!
ஆடி மாதத்தையொட்டி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார் டப்ஸ்மாஷ் புகழ் சித்ரா.
Recommended Video

சென்னை: ஆடி மாதம் பிறந்ததையொட்டி புதிய டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரசிகர்களால் ஆன்ட்டி என செல்லமாக அழைக்கப்படும் சித்ரா காஜல்.
இணையப் புகழ் கல்பனா அக்காவைப் போன்றே, தனது கலக்கல் டப்ஸ்மாஷ்களால் வைரலாகி வருகிறார் சித்ரா காஜல். ரசிகர்கள் இவரை அன்புடன் ஆன்ட்டி என்றே அழைக்கின்றனர்.
அவர் எந்த ஊர், வயது என்ன, குடும்பப் பின்னணி என்ன என எதுவும் தெரியவில்லை. ஆனால், பாடலாகட்டும், டயலாக் ஆகட்டும் ஒவ்வொரு டப்ஸ்மாஷூக்கும் கலக்கல் ரியாக்ஷன் கொடுத்து அப்ளாஷ் அள்ளி வருகிறார்.

ரசிகர்கள்:
அதிலும் சிரத்தையெடுத்து ஒவ்வொரு டப்ஸ்மாஷுக்கும் அவர் கெட்டப்புகளை மாற்றி, முழு சந்திரமுகியாகவே மாறி விடுவது அவரது ஸ்பெஷல். இதனாலேயே இரண்டு மாதங்களிலேயே உலகப்புகழ் அடைந்து விட்டார் அவர். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

டபுள் ஆக்ஷன்:
இந்நிலையில், ஆடி மாதம் பிறந்ததையொட்டி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆன்ட்டி. இதில் அம்மனாகவும், பக்தையாகவும் அவர் டபுள் ஆக்சன் செய்து மிரட்டியுள்ளார்.

ஆத்தா உன் கோவிலுல..
எக்ஸ்ட்ரா எபெக்ட்ஸ் எல்லாம் போட்டு, அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் சித்ரா. மற்றொரு புறம் மஞ்சள் சேலைக் கட்டி, ‘ஆத்தா உன் கோவிலுல..' என்ற பாடலை பாடுவது போல் நடித்துள்ளார்.

வைரல்:
தன் கம்பீரமான சொந்தக் குரலில் பாடி, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கல்பனா அக்கா. அவரைப் போலவே, சித்ரா ஆன்ட்டியும் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications