துக்ளக் ஆசிரியர் சோ இன்று என்னைச் சந்தித்தபோது....- கருணாநிதியின் பேஸ்புக் அப்டேட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேஸ்புக் அப்டேட்டில் திமுக தலைவரின் வேகத்துக்கு, பேஸ்புக்கே கதி என்று கிடப்பவர்களால் கூட ஈடு கொடுக்க முடியுமா தெரியவில்லை.
அத்தனை வேகத்தில் அறிக்கைகள், படங்கள் மற்றும் பிரபலங்களுடனான சந்திப்புகளை பதிவேற்றி வருகிறார்.
சற்று நேரத்துக்கு முன்பு அவர் போட்ட ஒரு ஸ்டேடஸ்தான், மேலே நீங்கள் படித்த தலைப்பு.

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தனது மகன் திருமணப் பத்திரிகையை வைத்துள்ளார் சோ. அதைத்தான் படத்தோடு வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
தனது மகன் திருமணப் பத்திரிகையை முதலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று நேரில் போய் கொடுத்தார் சோ. இன்று திமுக தலைவருக்கு கொடுத்து, திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பால், சோவிடம் அன்புடன் பேசிக் கொண்டிருந்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications