சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பத்திரிகையாளரும், சினிமா நடிகருமான சோ ராமசாமி திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகரான சோ ராமசாமி, வார இதழின் ஆசிரியர், அரசியல் விமர்சகர் போன்ற பல தளங்களில் செயல்பட்டு வருபவர். 79 வயதான சோ, முதுமை காரணமாக உடல் சோர்வுற்று காணப்படுகிறார். இந்நிலையில், உடல் நிலை திடீரென மோசமானதை தொடர்ந்து, அவர் செவ்வாய்கிழமை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இன்னும் மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அவரது குடும்ப வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கை மற்றும் கால்களில் வலி காணப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற சோவை அழைத்து வந்தோம். ஆனால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியதால் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மூட்டு இணைப்பு பகுதிகளில்தான் கடுமையான வலி காணப்படுகிறது. மற்றபடி விரைவில் குணமாகிவிடுவார் என்றே நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இம்மாதத்தின் துவக்கத்தில்தான் சோ ராமசாமி டிவிட்டர் தளத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications