ரஜினியை வேறு கோணத்தில் பார்த்தது 'மகிழ்ச்சி'... கபாலி படம் பார்த்த ’சோ’
சென்னை: தனது நண்பரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு தான் நடித்த கபாலி படத்தை திரையிட்டுக் காட்டினார் ரஜினிகாந்த்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். கபாலி திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை ரிலீசானது.

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் இப்படம், தொடர்ந்து நல்ல வசூலைத் தந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இந்நிலையில் தனது நண்பரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு தான் நடித்த கபாலி படத்தை திரையிட்டுக் காட்டினார் ரஜினிகாந்த்.
இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சோ ராமசாமியுடன் ரஜினி அருகில் உட்கார்ந்து படத்தை பார்த்தார். படத்தை பார்த்த பிறகு கருத்து தெரிவித்த சோ ராமசாமி, ‘நல்லாயிருக்கு. நல்லா எடுத்திருக்கீங்க' என்று படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோடு, ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications