டிவிட்டரில் இணைந்தார் சோ
சென்னை: அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி டிவிட்டரில் கால்பதித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி மாளிகை, நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்து, பவர் ஸ்டார் வரை பல பிரபலங்கள் டிவிட்டரில் இணைந்துள்ளனர். இந்த ஜோதியில் சோ ராமசாமி இன்று இணைந்துள்ளார்.

ஐயம்சோராமசாமி என்ற ஆங்கில வார்த்தை இவருக்கான டிவிட்டர் அக்கவுண்ட் பெயராக உள்ளது. முகப்பில் எம்.ஜி.ஆரிடமிருந்து பரிசு பெறுவது போன்ற கருப்பு, வெள்ளை புகைப்படத்தை வைத்துள்ளார். காலையில் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்துள்ள போதிலும், அதற்குள்ளாக சுமார் 200 பாலோவர்களை பெற்றுள்ளார்.
"கடவுளின் ஆசியால், டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளேன்" என்று தனது முதல் டிவிட்டை பதிவிட்டுள்ளார். அவர் இதுவரை செய்துள்ள 4 கீச்சுகளுமே, ஆங்கிலத்தில்தான் உள்ளன. சோ, குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு, ரஜினிகாந்த் வருகை தந்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications