ஜிலுஜிலு ஜிகினா ஸ்டார்… சில்லுனு ஸ்நோ மேன் பொம்மை – களை கட்டுது கிறிஸ்துமஸ் விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள்ஸ் ஆல் தி வே பாட்டு பாட எல்லாரும் ரெடி ஆகி வருகின்றனர்.

வேறொன்னுமில்லைங்க... கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் பெல்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, ஃவ்ரெத்ஸ் என்று விற்பனை களை கட்டத் துவங்கி உள்ளது.

ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி குழந்தைகள் இருக்கும் எல்லா வீட்டினரும் இந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களுக்கு அடிமைதான் என்பது சூடு பிடிக்கும் விற்பனையின் மூலமாக தெரியவந்துள்ளது.

ஜிங்கிள் பெல்ஸ்:

ஜிங்கிள் பெல்ஸ்:

கலகலவென ஒலி எழுப்பும் மணிகள்தான் ரகரகமாக குழந்தைகளைக் கவர்ந்து வருகின்றது. கோல்டு, சில்வர், ரெயின்போ என்ற விதவிதமான கலர்களில் வீட்டில் மணிகள் எழுப்பும் இசையின் மகிழ்ச்சியே தனிதான்.

கிறிஸ்துமஸ் ஸ்டார்:

கிறிஸ்துமஸ் ஸ்டார்:

ஏசுவின் பிறப்பின்போது வானில் தோன்றிய நட்சத்திரத்தினைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் ஸ்டாரினை டிசம்பர் மாத துவக்கத்தில்யே வீட்டின் முன் தொங்க விடுவது வழக்கம்.

எத்தனை எத்தனை ஸ்டார்கள்:

எத்தனை எத்தனை ஸ்டார்கள்:

அந்த ஸ்டாரில்தான் எத்தனை ரகங்கள்? பூப்போட்டது, மல்டி கலர், ஜிகினா என்று அப்படியே நமது உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றது.

கிறிஸ்துமஸ் ட்ரீ:

கிறிஸ்துமஸ் ட்ரீ:

அடுத்தபடியாக கிறிஸ்துமஸ் மரம்.... குட்டியா, பெருசா, கையடக்கமா, வானளாவ என்று எல்லா சைஸ்களிலும் அழகழகாக அடுக்கப்பட்டுள்ளது கடைகளில்.

குழந்தை ஏசு தேடி வருவார்:

குழந்தை ஏசு தேடி வருவார்:

அதில் மற்ற அலங்காரங்களையும் சேர்த்தால் கிறிஸ்துமஸுக்கு முன்னரே குழந்தை ஏசு நம் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவார்.

கிறிஸ்துமஸ் தாத்தா:

கிறிஸ்துமஸ் தாத்தா:

குழந்தைகளுக்கெல்லாம் காந்தி தாத்தாவிற்கு அடுத்தபடியாக பாரபட்சமின்றி பிடித்தவர் கிறிஸ்துமஸ் தாத்தா. மூட்டை நிறைய பரிசுகளுடன் வரும் இந்த தாத்தா, பொம்மையாகவும் இப்போது வீட்டிற்கு வருகின்றார்.

விதம் விதமான தாத்தாக்கள்:

விதம் விதமான தாத்தாக்கள்:

இந்த தாத்தா பொம்மைகள் சின்னதில் இருந்து பெரியது வரை எல்லா சைஸ்களிலும் கிடைக்கின்றது.

களைகட்டும் கிறிஸ்துமஸ்:

களைகட்டும் கிறிஸ்துமஸ்:

இதுமட்டுமல்லாமல், ஸ்நோ மேன் பொம்மைகள், குழந்தை ஏசு பொம்மைகள், குடில், மலர்கள், ஜிகினா அலங்காரங்கள் என்று எல்லாமே ஜரூர் விற்பனையில் எல்லாரையும் மகிழ்விக்க துவங்கியுள்ளது... கிறிஸ்துமஸை இவைகளுடன் இணைந்து ஜாலியாக கொண்டாடலாம் வாங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+