சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று சென்னை வரும் பிரணாப்: 4 அடுக்கு பாதுகாப்பு

சினிமா நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் துவங்கியது. விழாவை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இந்நிலையில் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார்.
இன்று கர்நாடக மாநிலம் பபிஜப்பூரில் சைனிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களை துவங்கி வைக்கிறார். அதன் பிறகு இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார்.
மாலை 5 மணிக்கு துவங்கும் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் பிரணாப் தென்னிந்திய திரை உலகில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். இந்த விழாவில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 5.25 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் பிரணாப் நிகழ்ச்சி முடியும் வரை அதாவது இரவு 7.20 மணி வரை அங்கிருப்பார். அதன் பிறகு அவர் காரில் கிளம்பி ராஜ் பவன் சென்று இன்றைய இரவை அங்கே கழிப்பார். நாளை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுவை செல்கிறார்.
புதுவை பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் பிரணாப் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு அவர் ஸ்ரீ அரவிந்தோ பன்னாட்டு கல்வி மையத்தின் மாணவர்களிடையே உரை நிகழ்த்துகிறார். வரும் 26ம் தேதி காலை அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரணாப் வருகையையொட்டி விமான நிலையம், நேரு அரங்கு, ராஜ் பவனில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications