Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகைகள் மஞ்சுளா + லதா.. ஜெயலலிதா அப்படி சொல்லியும், எம்ஜிஆர் கேக்கலியாமே.. இதுல இவ்ளோ இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா ஒரு ஐடியாவை சொன்னார்.. ஆனால், அதை எம்ஜிஆர் ஏற்கவில்லை.. மாறாக, தான் நினைத்தபடியே, விரும்பியபடியே, திட்டமிட்டபடியே அதை செய்து முடித்தார் எம்ஜிஆர் என்று புளகாங்கிதத்துடன் சொல்கிறார் இதயக்கனி விஜயன்.

சரித்திரம் படைத்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பொன்விழா ஆண்டு கண்டுள்ளது.. இந்த படம் உருவான விதம் குறித்தும், இந்த படத்தின்போது ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டைகள், சிக்கல்கள், சவால்கள், இவைகளை எல்லாம் வென்று, எம்ஜிஆர் இந்த படத்தை வெளியிட்ட விதம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் 'இதயக்கனி' விஜயன், நம்மிடம் விலாவரியாக பகிர்ந்து கொண்டார்.

சிறப்பு பேட்டி: குறிப்பாக, ஊர் ஊராக போஸ்டர் ஒட்டுவதற்கு கூட திமுக அரசு அன்றைய தினம் தடையாக இருந்தது என்பது குறித்தும் தன்னுடைய பேட்டியில் விளக்கி உள்ளார் விஜயன்.

Cinema: Karunanidhis movie and Do you know why did Jayalalitha not act in Ulagam Sutrum Valiban, says Idhayakkani vijayan

உலகம் சுற்றும் வாலிபன்: அந்த பேட்டியில் சொல்கிறார், "பல போராட்டத்திற்கு மத்தியில் வெளிவந்த படம் தான் "உலகம் சுற்றும் வாலிபன்". ஒரு பக்கம் திமுக அரசு இப்படி தொந்தரவு செய்தாலும் , படம் வெளியான 50 நாட்களில் 60 லட்ச ரூபாய் அரசுக்கு வருமானத்தை கொடுத்தது. இது இன்றைக்கும் பெரிய தொகை தான். அன்றைய காலகட்டத்திற்கும் இது பெரிய தொகை தான். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திரையரங்குகளில் அப்படி ஒரு வரவேற்பை இப்படம் பெற்றது.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்க முன்வந்த பல தயாரிப்பாளர்கள் திமுக அரசால் மிரட்டப்பட்டனர். அதனால் இரண்டு மூன்று வருடங்கள் எம்ஜிஆர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த மாதிரியான பிரச்சினையையும் எம்ஜிஆர் சந்தித்தார். முதலில் "உலகம் சுற்றும் தமிழன்" என பெயர் வைத்தார்கள். ஆனால் அதிலும் ஏதாவது அரசியல் ஆக்குவார்கள் என யோசித்து "உலகம் சுற்றும் வாலிபன்" என டைட்டில் மாற்றினார்கள்.

Cinema: Karunanidhis movie and Do you know why did Jayalalitha not act in Ulagam Sutrum Valiban, says Idhayakkani vijayan

இதயக்கனி விஜயன்: உலகத்திலேயே ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய சோதனைகளையும் சாதனைகளையும் சந்தித்தது என்றால் அது "உலகம் சுற்றும் வாலிபன்" மட்டும்தான்" என்றெல்லாம் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார் இதயக்கனி விஜயன்.. அப்போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏன் நடிக்கவில்லை? என்ற கேள்விக்கும் அவரே விளக்கம் தந்துள்ளார்..

"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, மேட்டா ரூங்ரட்டா, அதாவது தாய்லாந்து நடிகை, இவர்கள் கதாநாயகிகளாக நடித்தார்கள். அது அல்லாமல் படத்தில் ஆர் எஸ் மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், வி. கோபாலகிருஷ்ணன், நம்பியார் இவர்களும் உண்டு. இவர்கள் காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டில் எடுக்கப்பட்டது போலவே அது இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" ஜப்பான், அங்கு எக்ஸ்போ கண்காட்சி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகிய கிழக்காசிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

Cinema: Karunanidhis movie and Do you know why did Jayalalitha not act in Ulagam Sutrum Valiban, says Idhayakkani vijayan

4 ஹீரோயின்கள்: ஆரம்பத்தில் இந்த படத்தில் நான்கு கதாநாயகிகள், அதில் ஜெயலலிதாவும் ஒருவர். நான்கு கதாநாயகிகளில் ஜெயலலிதா நடிக்க வேண்டும் என்பதே எம்ஜிஆரின் விருப்பமாக இருந்தது.. இரண்டு பேரும் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் வேகம், படப்பிடிப்பு வேகமாக முடிவடைய உதவும் எண்ணம், தன்னால் எதுவும் பாதிக்கக்கூடாது என்கிற உத்வேகம் தான்.. "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் ஜெயலலிதா நடிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பியதன் காரணமும் இதுதான்.

இஷ்டமில்லை: ஆனால் கதாநாயகிகள் நான்கு பேர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அதில் விருப்பமில்லை. இரண்டு பேர் எம்ஜிஆரின் இரண்டு வேடங்களுக்கும், கதாநாயகிகளாக இருக்கட்டுமே என அவர் யோசனை சொல்ல, எம்ஜிஆரிடம் மற்றவர்கள் யோசனை எடுபடுமா? அவர் அதை காதில் வாங்குவாரா? எதிலுமே அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் நடக்கும்! நடத்தியும் காட்டுவார்! அதுதான் எம்ஜிஆர்! "இந்த படத்தில் ஜெயலலிதா இருந்தால் நான் வெளிநாடுகளுக்கு வரவில்லை" என்று ஆர்.எம்.வீயும் சொன்னார்.

Cinema: Karunanidhis movie and Do you know why did Jayalalitha not act in Ulagam Sutrum Valiban, says Idhayakkani vijayan

"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் நடிப்பதற்கு ஜெயலலிதா முடிவு சொல்லாததால் தான், சந்திரகலாவை தயார் செய்து விட்டார். கடைசி நேரத்தில் தான் இவ்வளவு பரபரப்பும்.

எங்கள் தங்கம்: இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.. "எங்கள் தங்கம்" ஷூட்டிங் முடித்துவிட்டு ஓரிரு தினங்களில் எம்ஜிஆர் ஜப்பான் கிளம்புவதாக இருந்தது. அதற்காக அவர் அங்கு சென்று விட்டால், திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆகும். அதுவரை படம் வெளியிடுவது பிரச்சினையாகும் என்று நினைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, கூடவே இருந்தார். ஆனால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்களது பிரச்னைகளை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்கள்" என்றார் இதயக்கனி விஜயன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+