கிடுகிடு உயர்வு.. இன்று முதல் சினிமா டிக்கெட் விலையுடன் 28 % ஜிஎஸ்டி.. அபிராமி ராமநாதன் தகவல்
இன்று முதல் சினிமா டிக்கெட் விலையுடன் 28 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும் என்று தமிழ்த் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி முறையை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

4 நாட்களாக 1000 திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எங்கள் இயலாமையினால்தான் நாங்கள் திரையரங்குகளை மூடினோம்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோரிடம் பேசினோம். அமைச்சர்கள் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் இந்தப் பிரச்சனை இன்று ஒரு முடிவிற்கு வந்துள்ளது.

கேளிக்கை வரி போட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சினிமா துறை சார்பில் 8 பேர் இருக்கிறோம். அது தவிர அரசு சார்பில் 6 பேரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கமிட்டியின் முடிவு கண்டிப்பாக எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனையடுத்து திரையரங்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும். இன்று முதல் திரையரங்குகளில் டிக்கெட் விலை 120 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் சேர்த்து ரூ.153.60 காசாக இருக்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications