மானாமதுரையில் குருவி பானை தயாரிக்கும் பணி தீவிரம்
மானாமதுரை: மானாமதுரையில் குருவி பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மானாமதுரை நகரம் மண்பாண்ட பொருட்களுக்கு மிகவும் புகழ் பெற்றது.
சீசனுக்கு ஏற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழக்கம்.

சீசன் இல்லாத சமயங்களில்
சீசன் இல்லாத சமயங்களில் அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர். தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் குருவிகளுக்கு பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

லவ் பேர்ட்ஸ் பானைகள்
வீடுகளில் லவ்பேர்ட்ஸ், கலர் குருவிகள், ஆஸ்திரேலிய கிளிகள் ஆகியவற்றை வளர்ப்பது பலருக்கும் பொழுது போக்காகவே உள்ளது. இந்த குருவிகள் பானைக் கூடுகளில் வசித்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.

கையகல பானையில்
மானாமதுரையில் கையகல பானையில் குருவி வசிப்பதற்கு ஏற்ற வகையில் பானை தயாரிக்கின்றனர். கலச பானையை விட சற்று சிறிய பானைகளாக தயாரித்து அதில் குருவி நுழையும் அளவிற்கு சிறிய ஓட்டை அமைத்து காயவைத்து வர்ணம் வீட்டி விற்பனை செய்கின்றனர்.

ஒரு பானை பத்து ரூபா
பானை ஒன்று 10 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மானாமதுரையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

காளிமுத்து சொல்வதைக் கேளுங்க...
குருவி பானை தயாரிப்பது குறித்து காளிமுத்து என்பவர் கூறுகையில் செய்களத்தூர், மானம்பாக்கி, கல்குறிச்சி உள்ளிட்ட கிராம கண்மாய்களில் இரும்புச் சத்து அதிகம் இந்த மண்ணில் இருந்துதான் பொருட்களை தயாரிக்கின்றோம். அனைத்து கண்மாய் மண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பொருட்கள் தயாரிக்கின்றோம்.

எங்களுக்குத்தேன் தெரியும்...
எந்த பொருட்களுக்கு என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த விகிதத்தில் கலந்து குருவி பாணை தயரிக்கின்றோம்.

திருச்சியிலிருந்து கேப்பாஹ..
எங்களுக்கு பெரும்பாலும் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்தான் விற்பனை அதிகளவு ஆகும் அங்கிருந்துதான் வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications