கடலில் கலந்த எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும்.. சட்டசபையில் அமைச்சர் தகவல்
2 கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் கடல் நீரில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கான நிவாரணம் வழங்க ஆலோசனை நடைபெற்று வ
சென்னை: எண்ணூர் காமராஜர் துறை முகம் அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தால் கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதின. இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடல் பகுதியில் கச்சா எண்ணெய் பரவி வருகின்றன. இதனால் மீன்கள், ஆமைகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்ற மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.
மேலும், கடல் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்றும் அதுவரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த 10 நாட்களுக்கான நிவாரணத்தை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஜெயக்குமார் சட்டசபையில் கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications