மதுக்கடைகளை மூடுங்கள்: மாவீரர் தினத்தில் ஆவேசப்பட்ட வைகோ!
சென்னை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுங்கள் அதை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிப்பதும், சிவாஜி சிலையை அகற்றுவதும் ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட்டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை எடுத்துரைத்தார். மேலும், மாவீரர் நினைவு தினத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் இருக்கின்றன. இவற்றினை குடித்துவிட்டு சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்களினால் எண்ணற்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. குடித்து விட்டு ஓட்டுபவர்களினால் விபத்து ஏற்படுகிறதே தவிர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளினால் அல்ல.
அதேபோல் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பூங்காவையும் இடித்துள்ளனர். இதனால் எண்ணற்றோரின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது தமிழக அரசு.

எனவே மூடவேண்டியது மதுக்கடைகளைத்தான் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போல மேடை அமைக்கப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் வடசென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.

ஆண்டுதோறும் மாவீரர்நாள் நினைவேந்தல் கூட்டம் தென் சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு வடசென்னைப் பகுதியான வண்ணாரப் பேட்டைப் பகுதியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications