எப்படி இருக்கிறார் கருணாநிதி?.. ஐசியூவுக்கு நேரில் சென்று பார்த்த முதல்வர், துணை முதல்வர்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
Recommended Video

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் விசாரித்தனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது தீவிர சிகிச்சைபிரிவில் உள்ள கருணாநிதியை முதல்வரும் துணை முதல்வரும் நேராக பார்த்தனர்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மாலை திடீர் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்றிரவே கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

முதல்வர் வருகை
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

ஸ்டாலினிடம் விசாரிப்பு
திமுக தலைவரின் உடல்நிலை குறித்து முதல்வரும் துணை முதல்வரும் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அப்போது கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி முதல்வரிடம் மருத்துவர்கள் விளக்கினர்.

நேராக பார்த்த முதல்வர்
இதைத்தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக பார்த்தனர்.

மருத்துவர்கள் கண்காணிப்பு
ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அமைச்சர்களும் சென்றனர்
அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம், காமராஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்றனர்.

கோபாலபுரம் இல்லம்
கடந்த 26ஆம் தேதி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications