ஆளுநரை முதல்வர் சந்தித்தது இதற்காகத்தான்!
Recommended Video

சென்னை: ரெட் அலர்ட் எச்சரிக்கை குறித்து விவாதிக்கவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அரசியல் அரங்கமே பரபரப்பாக காணப்பட்டது. ஒரு பக்கம் தினகரன் குரூப் ஏற்படுத்திய கலாட்டாக்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலிருந்து ஆற்றிய எதிர்வினைகள். உச்சகட்டமாக ஓ.பி.எஸ்ஸே செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்து விளக்கினார்.

மறுபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று பரபரப்பும் ஏற்பட்டது. 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்மானம் ஆளுநர் மாளிகையில் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. அதேபோல 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.
இந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, குறிப்பாக 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்மானம் தொடர்பாக முதல்வர் வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்தித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஆளுநரை சந்தித்தது வேறு காரணத்திற்காக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் முதல்வர் விளக்கினாராம். மேலும், தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஒருவருடம் நிறைவடைந்ததை அடுத்து பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டாராம்.
சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் இருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications