ஆம்பூர் பிரியாணி இருக்கே.. அருமையான பிரியாணி.. டேஸ்ட்டா இருக்கும்.. ரசித்து பேசிய எடப்பாடியார்
ஆம்பூர் பிரியாணி குறித்து முதல்வர் பாராட்டி பேசி உள்ளார்
திருப்பத்தூர்: "இந்த ஆம்பூர் பிரியாணி இருக்கே.. நல்ல சுவையான பிரியாணி" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரசித்து சிரித்தபடி சொல்ல கூட்டமே கை தட்டி மகிழ்ந்தது.
வேலூரைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரு புதிய மாவட்டங்கள் இன்று பிறந்துள்ளன. இந்த இரு மாவட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் அவர் பேசியபோது மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கி பேசினார். அதில் ஒரு ஹைலைட்டாக ஆம்பூர் பிரியாணி குறித்து சிலாகித்துப் பேசினார் முதல்வர். இதுதொடர்பாக முதல்வர் பேசுகையில் சொன்னதாவது:
"இந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தயாராகும் பிரியாணி மிகவும் சுவையானது, சிறப்பானது. இங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் இந்த ஊர் வழியாக வருவோர் போவோர் கூட நின்று பிரியாணியை சாப்பிட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு அந்த பிரியாணி சிறப்பானது. இது ஆம்பூருக்கு மட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் பெருமையானதாகும் என்றார் முதல்வர்.
ஆம்பூர் பிரியாணி குறித்து முதல்வர் சிலாகித்துப் பேசியபோது கூட்டமே உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. உண்மைதான்.. ஆம்பூரில் பிரியாணி உண்மையிலேயே மிகவும் டேஸ்ட்டானதுதான். அங்குள்ள சில குறிப்பிட்ட கடைகளில் விற்பனையாகும் பிரியாணி அருமையான சுவை கொண்டது.
அதை சாப்பிடாமல் அந்த வழியாக யாருமே போக முடியாது என்று கூறும் அளவுக்கு விசேஷமானதுதான். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அதன் முக்கிய அடையாளமாக ஆம்பூர் பிரியாணி விளங்குவது சிறப்பானதே.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications