ஆஹா.. கிளாஸை ஆத்தி ஆத்தி டீ குடிக்கிறது யாருன்னு பாத்தீங்களா?
சாலையோர டீ கடையில் டீ குடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டீ குடித்தார்
திருத்துறைப்பூண்டி: டீக்கடைக்குள் சென்று டீ குடித்துவிட்ட முதல்வரின் இந்த வீடியோதான் இன்னமும் வைரலாகி கொண்டிருக்கிறது.
நேற்று புயல் நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி முடித்துவிட்டு, அனைவரும் ஊர் கிளம்பினர். அப்போது திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியாக வழியாக வரும்போது வழியில் இருந்த டீ கடையில் முதல்வர் காரை நிறுத்த சொன்னார். அந்த கடையின் ஓனர் ரமேஷ் என்பவராம்.

சுவற்றோரம் முதல்வர்
அது ஒரு குட்டி டீ கடை. உள்ளே 2, 3 பெஞ்சுகள்தான் போடப்பட்டிருந்தது. முதல் பெஞ்சில் சுவற்றோரம் முதல்வர் உட்கார்ந்து கொண்டார். அவரை அடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் (இவருக்கு சொந்தமாக பெரியகுளத்தில் பெரிய டீக்கடையே உள்ளது) உட்கார்ந்திருந்தார்.

டயர்டாக இருந்தார்கள்
இப்படியாக பெஞ்சில் சில அமைச்சர்களும் உட்கார மற்றவர்களுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. செல்லூர் ராஜூவே அந்த பெஞ்சில் ஓரமாக ஒட்டிக் கொண்டுதான் உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் சின்னதான ஒரு சில்வர் டம்பளரில் டீ வந்தது. எல்லோருமே அதை குடிக்க ஆரம்பித்தார்கள்.

கிளம்பி சென்றனர்
முதலமைச்சர் உட்பட எல்லோருமே பார்ப்பதற்கே ரொம்ப டயர்டாக இருந்தார்கள். டீ குடித்துகொண்டே அமைச்சர்கள் பின் வரிசையில் பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் முதல்வர் மட்டும் அமைதியாக டீ குடித்து முடித்துவிட்டார். மற்றவர்களும் குடித்து முடிக்க எல்லோரும் கிளம்பி சென்றார்கள்.

டீ கடை பெஞ்சு
முதல்வர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையான முறையில் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீ சாப்பிட்டதை டீக்கடைக்க வந்தவர்கள், பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் என எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த டீ கடை நிகழ்வை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டு விட அது இப்போது, "டீ கடையில் டீ குடித்த முதல்வர்" என்ற பெயரில் சுட சுட வைரலாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications