"அம்மா"வுக்காக கோட்டை வாசலுக்கே வந்த பேருந்துகள்... 440 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ. 100 கோடியில் வாங்கப்பட்டுள்ள 14 சிற்றுந்துகள் உள்பட 440 புதிய அரசுப் பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

வழக்கமாக பெரிய மைதானத்தில் பேருந்துகளை நிறுத்தி முதல்வர் ஜெயலலிதா அதைத் தொடங்கி வைப்பார் அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைப்பார். இருப்பினும் நேற்று கோட்டை வாசலில் இருந்தபடி முதல்வர் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்.

அதாவது அவரது கார் நிறுத்தப்படும் இடத்தில் புதிய பேருந்து தொடக்க விழா நடைபெற்றது வித்தியாசமாக இருந்தது.

சென்னைக்கு 202 பேருந்துகள்

சென்னைக்கு 202 பேருந்துகள்

புதிய பேருந்துகள் விவரம்: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் 23 வழித்தடங்களில் 50 மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பஸ்களும், 4 புதிய வழித்தடங்களில் 4 பஸ்களும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 202 பஸ்களும் புதிதாக இயக்கப்படுகின்றன.

சேலத்திற்கு 78 - கோவைக்கு 25

சேலத்திற்கு 78 - கோவைக்கு 25

சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 78 பஸ்களும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 25 பஸ்களும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மலைப்பிரதேசங்களில் இயக்குவதற்கு ஏதுவாக 18 சிற்றுந்துகள் (ஸ்மால் பஸ்) இயக்கப்படுகின்றன.

நெல்லைக்கு 63

நெல்லைக்கு 63

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 63 பஸ்களும் என 422 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் மொத்தம் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 440 புதிய பஸ்கள் புதிதாக இயக்கப்படுகின்றன.

தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து இந்த 440 புதிய பஸ்களையும் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் - அதி்காரிகள்

அமைச்சர் - அதி்காரிகள்

இந்த நிகழ்ச்சியில், தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.பிரபாகர ராவ், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மே.பாலகிருஷ்ணசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+