மோடி பதவியேற்பு விழா: விஜய்காந்த் வந்தால் ஜெயலலிதா போவாரா?
சென்னை: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்றி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஜெயலலிதாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய மோடி, மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நட்பை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் நரேந்திர மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா செல்லக்கூடும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மோடி சார்பில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்க ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நாள் உறுதி செய்யப்பட்ட உடன், அழைப்பிதழ்கள் விடுக்கப்படுமாம்.
2011ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மோடி கலந்து கொண்டார்.
அதே போல 2012ம் ஆண்டு மோடி குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்ற விழாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தது நினைவு கூறத்தக்கது.
இதன் பின்னர் ஜெயலலிதா வீட்டில் மோடிக்கு விருந்தும் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், பதவியேற்பு விழாவுக்கு விஜய்காந்தையும் அழைத்துள்ளது பாஜக. அவர் வந்தால் ஜெயலலிதா வருவாரா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications