109 புதிய பஸ்கள், 46 ஸ்மால் பஸ் சேவைகள்: ஜெ. தொடக்கம்
சென்னை: தலைமைச் செயலகத்தில், 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 109 புதிய பேருந்துகள் மற்றும் 40 புதிய ஸ்மால் பஸ்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 குளிர்சாதன பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 41 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 14 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 25 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 13 வழித்தடங்களில் 40 சிற்றுந்துகள், என மொத்தம் ரூ.29 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டிலான 109 புதிய பேருந்துகள் மற்றும் 40 புதிய சிற்றுந்துகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தில் 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சோளிங்கர் பணிமனை, காஞ்சிபுரம் மண்டலத்தில் 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓரிக்கை-ஐஐ பணிமனை, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டலத்தில் 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இலுப்பூர் பணிமனை, என மொத்தம் ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பணிமனைகளை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications