ஜெயலலிதாவின் பாதுகாப்பு கார் மோதி வாலிபர் காயம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் கார் அணிவகுப்பில் முன்னால் சென்ற பாதுகாப்புப் படையினரின் கார் மோதி வாலிபர் ஒருவர் காயமடைந்தார்.
ஜெயலலிதா தினமும் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை சாலை வழியாக கோட்டைக்கு சென்று வருவது வழக்கம்.

அவரது காருக்கு முன்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்
மேலும், இந்த கார் அணிவகுப்பு செல்லும் பாதையில் போக்குவரத்தை சரிப்படுத்தி, தடையில்லாமல் வாகனங்கள் செல்லும் பணியை, அணிவகுப்பில் முதலாவதாகச் செல்லும் வார்னிங் காரில் உள்ள போலீசார் மேற்கொள்வர்.
நேற்று இந்த கார் மெரினா கடற்கரையில் உள்ள மாநிலக் கல்லூரிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கலங்கரை விளக்கத்தை நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் திடீரென சாலையில் வலது பக்கமாக திரும்பினார்.
இதனால் அந்த நபர் மீது வார்னிங் கார் மோதியது. ஆனால், அந்த காரை ஓட்டிய காவலர் மிகத் துரிதமாக செயல்பட்டு காரை உடனடியாக நிறுத்தியதால் வாலிபர் லேசான காயத்துடன் தப்பிவிட்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசாரால் கொண்டு செல்லப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் கார்த்திக் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றுகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications