For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் எடப்பாடியாரின் காரில் "CM"

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில குறியீடான சிஎம் என்ற எழுத்துடன் கூடிய புதிய காரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய காரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்- வீடியோ

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய காரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். அதில் ஆங்கிலத்தில் CM என்ற குறியீட்டை பயன்படுத்தி வருகிறார்.

    ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் ஏராளமான கார்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரது கார்களின் மதிப்பே பல கோடியாகும். ஜோதிடம், ராசி , எண் கணிதத்தில் மிகவும் ஈடுபாடுடையவர் ஜெயலலிதா.

    CM letter in Chief Minister Edappadi's car

    இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் ராசி எண் 9 என்று கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 9ஆம் தேதி தான் எடுப்பார். மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூட்டுத் தொகை 9 வருமாறு அமைத்துக் கொண்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுதலை செய்த தேதி மே 11 2014. மீண்டும் அரியணையில் அமரவைத்த நாள் என்பதால் 11 ஜெயலலிதாவின் ராசி நம்பர் ஆகிவிட்டது.

    இவர் கூட்டுத் தொகை 11 வரக் கூடிய TN 09 BE- 5969 என்ற காரை பயன்படுத்தி வந்தார். அதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் புதிய கார்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். அவரது புதிய வாகனத்தின் பதிவெண்ணில் சிஎம் என்ற ஆங்கில வார்த்தை வருகிறது. முதல்வர் என்று பொருள் வரும்படியான பதிவெண்ணை முதல்வருக்காக பிரத்யேகமாக மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது.

    புதிய TN 07 CM 2233 என்ற பதிவுவெண் கொண்ட காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதன் கூட்டுத் தொகை ஒன்று என உள்ளதால் அவரது ராசியான நம்பர் 1-ஆக இருக்கலாம் என தெரிகிறது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy uses new car with registration number TN 07 CM 2233. Like Jayalalitha he also uses new cars.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X