19 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு எதிரொலி.. சபாநாயகருடன் முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

19 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராகப் போர் கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை அன்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், முக்கிய சில இலாக்காக்களும் ஒதுக்கப்பட்டன.

சசிகலா நீக்க அறிவிப்பு

சசிகலா நீக்க அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., பொதுக் குழுவை கூட்டி சசிகலாவும் நீக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதற்குத் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

19 எம்எல்ஏக்கள் போர்க் கொடி

19 எம்எல்ஏக்கள் போர்க் கொடி

ஆத்திரமடைந்த 19 எம்எல்ஏக்களும், ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராகக் கடிதங்களை வழங்கினர். இதனால் எடப்பாடி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இந்நிலையில் அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே தங்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மிக அவசரமாக, சபாநாயகர் தனபாலை, முதல்வர் பழனிச்சாமி திடீரென தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தனித்தனி ஆலோசனை

தனித்தனி ஆலோசனை

இதில், தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களின் எதிர்ப்பை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டாக நடைபெற்றக் கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிச்சாமி சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடன் தனித்தனியான ஆலோசனையிலும் ஈடுப்பட்டார்.

திவாகரன் கோரிக்கை எதிரொலி

திவாகரன் கோரிக்கை எதிரொலி

சசிகலா சகோதரர் திவாகரன் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று பேசி வருகிறார். தனபால் முதல்வரானால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், சபாநாயகர் தனபாலுடனான முதல்வர் பழனிச்சாமியின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+