10,867 அடுக்கு மாடிக் குடியிருப்புகள்.. திறந்து வைத்தார் ஜெயலலிதா
சென்னை: தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 10,867 அடுக்கு மாடிக் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
தமிழகத்தின் நகர்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டப்பணிகளை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் செயல்படுத்தி வருகின்றது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில் சென்னையிலும் பின்னர் 1984ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்திலுள்ள இதர நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2048 அடுக்குமாடி குடியிருப்புகள்; நொச்சி நகரில் 45 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 628 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், அம்மன்குளத்தில் 23 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 792 அடுக்குமாடி குடியிருப்புகள்;
புதுக்கோட்டை நகராட்சியில் மச்சுவாடியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சந்தைப்பேட்டையில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 84 அடுக்கு மாடி குடியிருப்புகள்; திருநெல்வேலி மாநகராட்சியில், வ.உ.சி. நகரில் 5 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 207 அடுக்குமாடி குடியிருப்புகள்; தூத்துக்குடி மாநகராட்சியில், துரைசிங் நகரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 78 குடியிருப்புகள்;

நாமக்கல் நகராட்சியில், எம்.ஜி.ஆர். நகரில் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 342 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஓசூர் நகராட்சியில் எழில் நகர் பகுதி2ல் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; சேலம் மாவட்டம், எருமாபாளையத்தில் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 400 அடுக்குமாடி குடியிருப்புகள்;
என மொத்தம் 441 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10,867 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 270 முதல் 357 சதுர அடி கொண்ட பரப்பளவில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் முதல் 7 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை யிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இக்குடியிருப்பு ஒவ்வொன்றிலும், ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கேற்ப சில திட்டப் பகுதிகளில் சமூக கட்டமைப்பு வசதிகளான நூலகம், சிறு கடைகள், நியாயவிலைக் கடைகள், ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நீர் வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும் மற்றும் மீனவ குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தங்க கலியபெருமாள், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தலைவர் தங்கமுத்து, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சந்திரசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications