Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மஞ்சள் டீ சர்ட்.." பக்கத்திலேயே உதயநிதி.. சென்னை மேட்ச்க்கு முதல்வர் ஸ்டாலின் சப்ரைஸ் விசிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னை- ஹைதராபாத் போட்டி நடக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு சப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

கடைசி நிமிடம் வரை ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது. இப்போது லீக் போட்டிகள் தான் என்றாலும் கூட இப்போதும் கடைசி ஓவர் வரை நமது பிபியை அதிகமாக்குவதையே ஐபிஎல் வாடிக்கையாக வைத்துள்ளது.

CM Stalin visited Chepauk stadium on Chennai vs Hyderabad match IPL 2023

கிரிக்கெட்டை வழக்கமாகப் பாலோ செய்யாத நபர்கள் கூட ஐபிஎல் போட்டிகள் வந்தால் பார்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்- மே மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஐபிஎல் தொடர்: கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்றது. ஆனால், இந்தாண்டு கொரோனா இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. பழையபடி Home- Away conceptஇல் மீண்டும் நடக்கிறது. அதாவது 7 போட்டிகள் ஹோம் மைதானத்திலும் 7 போட்டிகள் வெளி மைதானங்களிலும் நடத்தப்படும்.

CM Stalin visited Chepauk stadium on Chennai vs Hyderabad match IPL 2023

சென்னை அணி பொதுவாகவே ஹோம் கிரவுண்டை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டதாகும். அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் சிஎஸ்கே எப்போதும் மிக வலிமையானதாக இருக்கும். எந்த சீசன்களில் எல்லாம் ஹோம் போட்டிகளில் சிஎஸ்கே சிறப்பாக இருந்து இருக்கிறதோ.. அப்போதெல்லாம் புள்ளிப் பட்டியலில் டாப்பில் முடித்துள்ளார்கள். ஹோம் கிரவுண்டில் கோட்டைவிட்டால் அந்த சீசனே சிஎஸ்கேக்கு கடினமாக இருந்துள்ளது.

சேப்பாக்கம் மைதானம்: அதற்கேற்ப சிஎஸ்கே ரசிகர்களும் எப்போதும் சென்னைக்கு மிக பெரியளவில் ஆதரவை வழங்குவார்கள். இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஆடியவர்கள் அனைவருமே சென்னை ரசிகர்களைப் புகழ்வதை வைத்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம். இதனிடையே இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

CM Stalin visited Chepauk stadium on Chennai vs Hyderabad match IPL 2023

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி ஆடியுள்ள 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் கிட்டதட்ட பாதி போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சென்னை vs ஹைதராபாத்: இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் சென்னை அணி ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். சென்னை அணி தரப்பில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் எம்எஸ் தோனி களமிறங்கியுள்ளார்.

அதேபோல சுழலுக்குச் சாதகமானது என்பதால் சான்ட்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் சேர்க்கப்படவில்லை. இந்தப் போட்டி தொடங்கியது முதலே பரபரப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. சென்னை ரசிகர்கள் ஒவ்வொரு பாலுக்கும் விண்ணைப் பிளக்கும் அளவுக்குக் கரகோஷம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே போட்டி விறுவிறுப்பாகப் போட்டி சென்று கொண்டு இருக்கும் சூழலில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு சப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

மஞ்சள் டீ சர்ட்: முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் போட்டியைக் கண்டு களித்தார். பக்கா போலீஸ் பாதுகாப்புடன் அவர் மைதானத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்திருந்த ஸ்டாலின் தனது மனைவியுடன் போட்டியைக் கண்டு ரசித்தார். அப்போது அருகிலேயே உதயநிதியும் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மிகப் பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதால் இதற்கு முன்பு நடந்த போட்டிகளுக்கே அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்றைய தினம் நடக்கும் போட்டியில் நேரடியாகவே முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார். முதல்வரைப் பெரிய திரையில் காட்டியதும் அங்குக் கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+