"உடனே பாருங்க.." ஜனநாயகனுக்காக நேரடியாக களத்தில் இறங்கிய "முதல்வர்" விஜய்.. வரப்போகுது மெகா அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள 'விஜய், தனது அரசியல் பணிகளுக்கு இடையே, திரையுலகில் பாதியில் நின்ற தனது 'கடைசி' அத்தியாயத்தை முடிக்கக் களமிறங்கியுள்ளார். சென்சார் பிடியில் சிக்கி, ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை எப்படியாவது திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் அரசியலில் முழு வீச்சாக இறங்கும் முன்பு நடித்திருந்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்தப் படம் கடந்த பொங்கல் சமயத்திலேயே ரிலீஸ் ஆக வேண்டி இருந்தது. இருப்பினும், உரிய நேரத்தில் சென்சார் கிடைக்கவில்லை. அதன் பிறகும் கூட சென்சார் சான்றிதழை வாங்க நடக்கும் முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைத்தாக தெரியவில்லை.

Jana nayagan Vijay Jana nayagan censor

"முதல்வர்" விஜய்

இதற்கிடையே முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்களைத் தீர்க்குமாறு தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் நடக்கும் புகழ்பெற்ற 'கேன்ஸ்' (Cannes) திரைப்பட விழாவில் பங்கேற்றுக் கொண்டிருந்த தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை, உடனே சென்னைக்குத் திரும்புமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் வேலைகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர் இப்போது சென்னைக்கு விரைந்துள்ளார்.

ஜனநாயகன்

கடந்த டிசம்பர் முதலே 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் வாரியத்திடம் மல்லுக்கட்டி வருகிறது. படத்தில் உள்ள சில காட்சிகள் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாகப் பாதுகாப்புப் படை தொடர்பான சில காட்சிகளுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறி சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டது. இருப்பினும், அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட முயன்று, அது நீதிமன்றப் போராக மாறியது. இறுதியில் வழக்கை வாபஸ் பெற்ற படக்குழு, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு Revising Committee அனுப்பியது. பல வாரங்களாக அங்கே முடங்கிக் கிடக்கும் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் இப்போது தீவிரமாக நடக்கின்றன.

இணையத்தில் லீக்

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 9ம் தேதி இந்தப் படத்தின் எச்.டி பிரிண்ட் இணையத்தில் கசிந்து படக்குழுவுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. இது தொடர்பாக ஒரு ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உட்பட 9 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தால் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ், எடிட்டர்கள் சங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் படத்தை KVN புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது

நிஜ வாழ்க்கையில் முதலமைச்சராகிவிட்ட விஜய்யை, திரையிலும் அதே பெயரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. சுமார் ₹500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், லீக் ஆன போதிலும் அதன் மவுசு குறையவில்லை. முதல்வர் விஜய் என்ற டைட்டில் கார்ட்டை படத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இவ்வளவு காலம் தேர்தல் வேலைகள் இருந்ததால் ஜனநாயகன் படத்திற்குக் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது தேர்தல் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து சென்சார் மீது படக்குழுவின் பார்வை திரும்பியுள்ளது. சென்சார் சிக்கல்கள் விரைவில் தீர்ந்து, விரைவில் ஒரு மெகா ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+