சென்னை கடற்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு இடம்பெயர்ந்த 1 கப்பல், 6 படகுகள்
சென்னை: சென்னை கடற்படை தளத்தில் இருந்து ஒரு கப்பல் மற்றும் 6 படகுகள் அந்தமான், நிக்கோபார் தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கடற்படை தளத்தில் இருந்த ஐசிஜிஎஸ் ராஜ்கமல் என்ற கப்பலும், 6 படகுகளும் அந்தமான், நிக்கோபார் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தமான் நிக்கோபார் பகுதியில் கடல் பாதுகாப்பை பலப்படுத்த கப்பல் மற்றும் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் கப்பல் மற்றும் படகுகள் கிளம்பிச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த கப்பல் மற்றும் படகுகளில் செல்லும் வீரர்களுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலோர காவற்படை தலைவர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எல். தால்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ராஜ்கமல் கப்பலுக்கு பதிலாக சென்னைக்கு ஐசிஜிஎஸ் அர்ன்வேஷ் கப்பல் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications